#Breaking :தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.!
16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அபூர்வா, ஹிதேஸ்குமார் மக்வானா, அதுல்யா, எஸ்.ஜே.சிரு, ஆபிரகாம், சரவண வேல்ராஜ், ஜான் லூயிஸ், செல்வராஜ், லில்லி, நந்தகோபால், கிரண் குராலா, பழனிசாமி உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டு துறை கூடுதல் செயலாளராக அதுல்ய மிஸ்ரா, வீட்டு வசதி துறை முதன்மைச் செயலாளராக அபூர்வா, பேரூராட்சிகள் இயக்குனராக கிரண் குராலா, உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக பழனிச்சாமி, ஹித்தேஷ் குமார் வீட்டு வசதி துறை துணைச் செயலாளர் என பல்வேரு துறைகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன.