15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.! புதிய மாவட்ட ஆட்சியர்கள் விவரம் இதோ…
சென்னை: தமிழக உள்துறை செயலாளராக பொறுப்பில் இருந்த அமுதா ஐஏஎஸ் அவர்களை இடமாற்றம் செய்து புதிய உள்துறை செயலாளராக தீராஜ்குமாரை தமிழக அரசு நியமனம் செய்தது.
அமுதா ஐஏஎஸ் உட்பட தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர் என மொத்தம் 15 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அவர்களுக்கு பதிலாக புதிய ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
10 புதிய மாவட்ட ஆட்சியர்களின் விவரங்கள்…
- ராணிப்பேட்டை ஆட்சியராக J.U.சந்திரலேகா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- புதுக்கோட்டை ஆட்சியராக அருணா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- நீலகிரி ஆட்சியராக லட்சுமி பவ்யா தண்ணீரு ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தஞ்சாவூர் ஆட்சியராக B.பிரியங்கா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- நாகப்பட்டினம் ஆட்சியராக P.ஆகாஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- அரியலூர் ஆட்சியராக P.ரத்தினசாமி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கடலூர் ஆட்சியராக சிபி ஆதித்யா செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கன்னியாகுமரி ஆட்சியராக R.அழகுமீனா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- பெரம்பலூர் ஆட்சியராக கிரேஸ் லால்ரின்டிகி பச்சுவாவ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ராமநாதபுரம் ஆட்சியராக சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4 புதிய மாநகராட்சி ஆணையர்கள்…
- சென்னை மாநகராட்சி ஆணையராக J.குமரகுருபரன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ஈரோடு மாநகராட்சி ஆணையராக டாக்டர். நர்னாவேர் மணீஷ் சங்கர்ராவ், ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சென்னை மாநகராட்சி இணை ஆணையராக (கல்வி) டாக்டர். ஜே. விஜயா ராணி, ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தாம்பரம் மாநகராட்சி ஆணையராக எஸ்.பாலசந்தர், ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.