இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ரயில் மேம்பாலம் பணிகள் நிறைவடைத்தை அடுத்து இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு.
வேலூர் காட்பாடி அருகே திருவலம் ரயில்வே மேம்பாலம் சீரமைக்கப்பட்டதால் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. தூண்களில் ஏற்பட்ட விரிசல் சீரமைக்கப்பட்டதை அடுத்து, 3 நாட்களுக்கு பிறகு மேம்பாலத்தில் ரயில் ஓட தொடங்கியது. இன்ஜின், சரக்கு ரயிலை தொடர்ந்து முதல் பயணிகள் ரயிலாக சென்னை – திருவனந்தபுரம் ரயில் புறப்பட்டு சென்றது.
விரிசல் ஏற்பட்டு சீரமைக்கப்பட்ட மேம்பாலம் பகுதியில் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, காட்பாடி அருகே திருவலத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
இதன்பின் மேம்பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், பணி நிறைவடைந்து இன்று முதல் ரயில் சேவை மீண்டும் வழக்கம்போல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025