மாண்டஸ் புயலின் தாக்கத்தை பொறுத்து ரயில் சேவை இருக்கும்.! தென்னக ரயில்வே தகவல்.!
மாண்டஸ் புயலின் தாக்கத்தை பொறுத்து பாதுகாப்பு தேவை இருப்பின் இரவு நேரத்தில் ரயில்கள் தாமதமாக புறப்படும். – தென்னக ரயில்வே.
மாண்டஸ் புயல் இன்றிரவு கரையை கடக்கும் என்பதால் வடதமிழகத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று 6 மாவட்டங்களில் இரவு நேர பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன் பிறகு புயலின் தாக்கம் உள்ள பகுதிகளில் மட்டும் பேருந்து சேவை நிறுத்தப்படும் எனவும் மற்ற பகுதிகளில் சேவை வழக்கம்போல இருக்கும் எனவும் போக்குவரத்துக்கு துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சென்னை விமான சேவையில் குறிப்பிட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் முக்கிய தகவலை குறிப்பிட்டுள்ளது.
இதுவரையில் எந்த ரயில் சேவையும் நிறுத்தப்படவில்லை. வழக்கம் போல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாண்டஸ் புயலின் தாக்கத்தை பொறுத்து பாதுகாப்பு தேவை இருப்பின் இரவு நேரத்தில் ரயில்கள் தாமதமாக புறப்படும். என தென்னக ரயில்வே சென்னை கோட்டம் குறிப்பிட்டுள்ளது.