ஓய்வு எடுத்த கனமழை: சென்னை சென்ட்ரலில் இருந்து வழக்கம்போல் ரயில்கள் இயக்கம்.!
சென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட 3 ரயில்கள், வழக்கம் போல இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் மழைநீர் தேங்கி இருந்ததால், மாற்று ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.
ஆனால், நேற்றிரவு முதல் மழை படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில், வியாசர்பாடி – பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் தேங்கி இருந்த மழைநீர் அகற்றப்பட்டது.
இதனால், ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட மற்றும் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் மற்றும் சென்ட்ரலில் இருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால், மைசூரு – சென்னை காவேரி ரயில் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கம்போல் ரயில்கள் இயக்கம்
- 2160 சென்னை சென்ட்ரல் – மும்பை ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். முன்னதாக சென்னை – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
- 22637 சென்னை சென்ட்ரல் – மங்களூர் சென்ட்ரல் ‘வெஸ்ட்கோஸ்ட்’ ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். முன்னதாக சென்னை – திருவள்ளூர் இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
- 12695 சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். முன்னதாக சென்னை – ஆவடி இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Resumption of traffic over Bridge No.14 between Basin Bridge and Vyasarpadi Railway Stations (UP fast line from 02.10 hrs and DN line from 04.20 hrs of 16th Oct 2024#SouthernRailway pic.twitter.com/PkhAXmqVPC
— Southern Railway (@GMSRailway) October 16, 2024
இதற்கிடையில், வியாசர்பாடி – பேசின் பிரிட்ஜ் இடையே மழைநீர் தேங்கியதால் நேற்றைய தினம் சில ரயில்கள், ஆவடி மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.