ரயிலை பயணத்தை நோக்கி படையெடுக்கும் மக்கள் !காரணம் என்ன ?
அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ரயிலில் பயணிக்க மக்கள் தொடங்கியுள்ளனர்.
பேருந்துக் கட்டண உயர்வு பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. பேருந்துகளைவிட ரயில்களில் பயணம் செய்தால் பணம் மிச்சமாகும் எனக் கருதி, முடிந்தவரை ரயில்பயணங்களை மேற்கொள்கின்றனர்.
இதனால், கடந்த சில நாட்களாக புறநகர் ரயில்களில் வழக்கத்தைவிட கூட்டம் பல மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.இதேபோன்று, சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
பேருந்துக் கட்டணங்களை ஒப்பிடுகையில், ரயில் கட்டணம் பெரும்பாலும் குறைவாகவே உள்ளது.சென்னையில் இருந்து திருச்சிக்கு அல்ட்ரா டீலக்ஸ் ரக பேருந்தில் 372 ரூபாயும், விரைவு ரயிலில் 2ஆம் வகுப்பு கட்டணம் 115 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து கோவைக்கு 571 ரூபாய் பேருந்துக் கட்டணம் உள்ள நிலையில், ரயில் கட்டணம் 150 ரூபாயாக உள்ளது. அதேபோன்று சென்னையில் இருந்து மதுரைக்கு பேருந்துக் கட்டணம், 515 ரூபாயும், 2ஆம் வகுப்பு ரயில் கட்டணம் 150 ரூபாயாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சென்னையிலிருந்து, திருநெல்வேலி செல்பவர்களுக்கு பேருந்து கட்டணம் 695 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2ஆம் வகுப்பு ரயில் கட்டணம் 185 ரூபாயாகவும், ராமேஸ்வரம் செல்வதற்கு பேருந்தில் 650 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் வேளையில் 2ஆம் வகுப்பு ரயில் கட்டணம் 175 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….