சீர்காழி அருகே தண்டவாளத்தில் விரிசல்…உரிய நேரத்தில் வண்டியை நிறுத்திய இஞ்சின் டிரைவர்…
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் சென்ற பயணிகள் ரயில் இன்று காலை சரியாக 6:10 மணிக்கு சீர்காழியை கடந்த போது ரயில் பாதையில் வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து ரயில் டிரைவர் சீர்காழி ரயில்வே நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் 6: 35 மணிக்கு வந்த திருச்செந்தூர் ரயில் சீர்காழி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து ரயில்வே பொறியாளர் மற்றும் ஊழியர்கள் ரயில் பாதையை சோதனையிட்ட போது பாதரக்குடி என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. நீண்டநேரம் கடுமையாக போராடி ஊழியர்கள் அந்த விரிசலை சரிசெய்தனர். இதையடுத்து ஒரு மணிநேரம் தாமதமாக 6:40 மணிக்கு திருச்செந்தூர் விரைவு ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. உரிய நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் அசம்பாவிதம் இன்றி தடுக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர்.