தீபாவளி: தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன ரயில் டிக்கெட் முன்பதிவு.!

train ticket

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல, இன்று காலை 8 மணி முதல் டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் IRCTC இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அடுத்த 3 நாட்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும்பாலன ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. நவம்பர் 12ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், நவம்பர் 9ம் தேதிக்கான முன்பதிவு தொடங்கியது.

அதன்படி, சென்னை – மதுரை பாண்டியன் ரயில், சென்னை – செங்கோட்டை பொதிகை ரயிலில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. மேலும், தென் மாவட்ட ரயில்களில் இரண்டாம் வசதி படுக்கை டிக்கெட் விற்று தீர்ந்துள்ளததாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்