தூத்துக்குடியில் நாளை முதல் ரயில் சேவை தொடக்கம்.!
தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த கனமழையால் பெரும்பாலான சாலைகள் பாதிப்படைந்து பேருந்து செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டது. மேலும், கடும் வெள்ள பாதிப்பால் ரயில்வே பாதைகள் சேதமடைந்தன.
இதனால், தென் மாவட்டங்களில் ரயில்சேவை தற்காலியமாக ரத்து செய்யப்பட்டது. இப்பொது, மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நாளை (டிச.22) முதல் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் தண்டவாளங்களில் நீரை அகற்றும் பணி நடைபெற்று வருவதால் ஒருவாரத்திற்குள் ரயில் சேவை தொடங்கப்படும் என எதிரிபார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அவன் ஊர்ல வெள்ளம் வந்தா அவன் போக கூடாதா? மாரி செல்வராஜுக்கு குரல் கொடுத்த வடிவேலு.!
அதன்படி, எழும்பூர் – கொல்லம் ரயில், நாளை 22 ம் தேதி மற்றும் 24ம் தேதி இரவு 11.55க்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, அடுத்தநாள் மாலை 4.30க்கு கொல்லம் சென்றடையுமாம். மேலும், கோவை – பொள்ளாச்சி – கோவை இடையே வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்த முன்பதிவில்லா சிறப்பு ரயில், வரும் 25ம் தேதி முதல் தினசரியும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.