#தொடங்கியது_சென்னை To கர்நாடகம்-கேரளா: இரயில் சேவை!!
6 மாத கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தற்போது சென்னையிலிருந்து கேரளா, கர்நாடகாவுக்கு வரும் ஞாயிறு முதல் ரயில் போக்குவரத்து துவங்குகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தெற்கு ரயில்வே முக்கிய நகரங்களுக்கு இடையே ரயில்வே போக்குவரத்தினை நிறுத்தி வைத்தது. இந்நிலையில் 6 மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு கேரளா மற்றும் கர்நாடகா இடையே சென்னையிலிருந்து ரயில்சேவை வரும் ஞாயிறு முதல் துவங்கப்பட உள்ளது.
அதன் படி சென்னை to திருவனந்தபுரத்திற்கு செப்27 தேதியிலிலும், சென்னை to மங்களூரு இடையே செப்28 தேதியிலும் ரயில் போக்குவரத்து துவங்க உள்ளது. சென்னை மைசூரு இடையேயான ரயில்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில்நிலைய3ம் to திருவனந்தபுரம் செல்லும் ரயில் மாலை 7.45 க்கு கிளம்பி திருவனந்தபுரத்திற்கு மறுநாள் காலை 11.45க்கு சென்றடையும்.திரும்ப மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு சென்னை வந்தடையும் என்றும் சென்னை to மங்களூருக்கு இரவு 8.10 க்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.10 க்கு மங்களூரு சென்றடையும். திரும்பவும் மதியம் 1.30 க்கு மங்களூருவிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.30க்கு சென்னை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.