தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை தாம்பரம் – கடற்கரை வரையிலான மின்சார ரயில் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

chennai Electric train

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் ஏராளமான மக்கள் இந்த மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

சொல்லப்போனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பணியாளர்கள் என இந்த ரயில் சேவையை பெரிதும் நம்பியுள்ளனர். இந்த சுழலில் பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரயில் சேவை அவ்வப்போது குறிப்பிட்ட வழித்தடங்களில் ரத்து செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், தாம்பரம் – கடற்கரை வரையிலான மின்சார ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக  நாளை (செப்.22) காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆனால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் இடையிலான புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக பயணிகளின் வசதிக்காகச் சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே குறிப்பிட்ட நேர இடைவெளியில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்