மதுரை ரயில் நிலையம் அருகே மற்றொரு ரயிலுடன் இணைக்க நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் திடீரென நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டதில், 9 பேர் உயிரிழந்தனர். 8க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மற்றும் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணையானது நடைபெற்று வருகிறது.
உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென் இந்தியா நோக்கி சிறப்பு ரயிலில் ஆன்மீக யாத்திரையாக 64 பேர் பயணித்துள்ளனர். மதுரை, ராமேஸ்வரம் பகுதியில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில், ரயில் பயணித்த பயணிகள் எடுத்து வந்த சமையல் சிலிண்டர் வெடித்தது காரணமாக இரண்டு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அதில் இருந்து தப்பிச்சென்ற 5 தனியார் சுற்றுலா நிறுவன ஊழியர்களிடம் ரயில்வே காவல்துறை சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், ரயிலில் விபத்து ஏற்பட்டது தொடர்பாக 2-வது நாளாக தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்விபத்துக்குள்ளான ரயில் பெட்டியில் உள்ள பேட்டரிகளின் வெப்பநிலை, பராமரிப்பு குறித்து சோதனை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…