ரயில் விபத்து – தெற்கு ரயில்வே விளக்கம்..!
மின்சாரரயில் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. வேகமாக சென்ற ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பிரேக் சரியாக இயங்காததால், கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி ரயில் விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ரயிலில் யாரும் இல்லை எனவும், விபத்தில் ரயில் ஓட்டுநர் மட்டும் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
தற்போது ரயிலை சீர்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து விளக்கமளித்த தெற்கு ரயில்வே, மின்சாரரயில் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி ரயில் விபத்துக்குள்ளானதாகவும், ரயிலில் யாரும் இல்லாததால், சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.