ரயில் விபத்து : சென்னை – அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிப்பு..!

அரக்கோணம் மற்றும் மோசூர் பகுதி இடையே, சரக்கு ரயில் ஒன்று திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால், சென்னை மற்றும் அரக்கோணம் இடையே ரயில் போக்குவரத்து பாதிப்பு.
அரக்கோணம் மற்றும் மோசூர் பகுதி இடையே சென்னையில் இருந்து ரேணிகுண்டா செல்லும் 22 பெட்டிகளை கொண்ட சரக்கு ரயில் ஒன்று திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து சென்னை மற்றும் அரக்கோணம் இடையே ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இன்று சென்னை- அரக்கோணம் இடையே செல்லும் மின்சார ரயில் ரத்தாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தடம் புரண்ட சரக்கு ரயிலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இதெல்லாம் நமக்கு தேவையா குமாரு’.., சூட்கேஸ் உள்ளே காதலி.! வசமாக சிக்கிக்கொண்ட மாணவன்.!
April 12, 2025
பாஜக – அதிமுக கூட்டணி: ”விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி”- தவெக தலைவர் விஜய்.!
April 12, 2025