சென்னையில் நேர்ந்த சோகம்! காற்றில் பறந்த எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழப்பு!

குன்றத்தூரில் எலி மருந்தால் ஏற்பட்ட நெடி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளது.

Childrens Died due to Rat Killer

சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை ஸ்வாசித்ததால் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மணஞ்சேரியைச் சேர்ந்த 34 வயதுடைய கிரிதரன் தனியார் வங்கியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், இவரது மனைவி பவித்ராவுக்கும் விஷாலினி (6 வயது) மற்றும் சாய் சுதர்சன் (4 வயது) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கிரிதரன் வீட்டில் அதிக எலித் தொல்லை இருந்துள்ளது.

இதனால் அவர் எலிமருந்து, எலி பேஸ்ட் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தி வந்துள்ளார். இப்படி இருக்கையில், வீட்டில் எலி மருந்து வைத்த நிலையில் அந்த மருந்தின் நெடி வீடு முழுவதும் பரவி இருக்கிறது. இதைச் சுவாசித்த கிரிதரன் உட்பட அக்குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் சில மணி நேரங்களில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக, 4பேரும் உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அதில், தற்போது கிரிதரனின் குழந்தைகளான ஷாலினி மற்றும் சுதர்சன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். மேலும், கிரிதரன் மற்றும் பவித்திரா இருவரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீட்டில் ஏ.சி உபயோகப்படுத்தியதால் எலியைப் பிடிக்க வைத்திருந்த மருந்தின் நெடி பரவி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamil Nadu Finance Minister Thangam Thennarasu
TNBudget2025 - budget
Free laptop for College students
tidel park TN
Tamil Nadu Budget 2025
TN Budget 2025 for students
TNBudget2025