போக்குவரத்து விதிமீறல் – புதிய நடைமுறைகளை அறிவித்தது தமிழக அரசு!

Traffic rules

சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகம்.

போக்குவரத்து விதிமீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே அபராதம் விதிக்க புதிய நடைமுறையை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதன்படி, மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய நடைமுறைகளை அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு. சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

எலக்ரானிக் என்போர்ஸ்மென்ட் கருவியை பயன்படுத்தி போக்குவரத்தை கண்காணித்தல், விபத்தை தவிர்க்க வேண்டும். அதாவது, Electronic Enforcement Device-ஐ பயன்படுத்தி போக்குவத்தை கண்காணித்தல், விபத்தை தவிர்த்தல், விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தமிழக அரசு தயாராகி வருகிறது.

விதிமீறும் வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு 15 நாட்களுக்குள்ளாக கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே அபராதம் விதிக்க புதிய நடைமுறை விதிக்கப்பட்டுள்ளது. தேதி, நேரம், இடம் ஆகியவற்றுடன் மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும் அபராதச் சீட்டைப் பெற்றுக்கொண்டு இணையதளத்திலோ அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களிலோ அபராதம் செலுத்திக் கொள்ளலாம்.

மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில், போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொறுத்த வேண்டும். போக்குவரத்து காவலர்கள், தங்கள் உடலில் கேமராவை பொருத்தி வாகன போக்குவரத்தைக் கண்காணிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு. தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்களில் நவீன கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்