இன்று மாலை 7 மணி முதல் கொடைக்கானல் செல்லும் வாகன போக்குவரத்து நிறுத்தம்!

Default Image

புரேவி புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்கு செல்ல கூடிய அனைத்து பேருந்துகளும் இன்று மாலை 7 மணி முதல் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தற்பொழுது புரேவி புயல் உருவாகி உள்ளதால், இது கரையை கடக்கும் நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் சிலவற்றுக்கு கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு செல்லக்கூடிய பேருந்துகளை நிறுத்த போவதாக ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று மாலை 7 மணி முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் அனைத்துமே மறு அறிவிப்பு வரும் வரையிலும் வத்தலகுண்டு பழனி மற்றும் அடுக்கம் சாலைகளில் பயணிக்க கூடாது என தடை விதித்து சிவகுரு பிரபாகரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்