சென்னையில் வாகன ஓட்டிகளின் வேக கட்டுப்பாட்டு அளவை மாற்றியமைக்க போக்குவரத்து காவல்துறை திட்டம்.
சென்னையில் வாகன ஓட்டிகளின் வேக கட்டுப்பாட்டு அளவை மாற்றியமைக்க போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்.
சென்னை சாலைகளில் 40 கி.மீ மேல் வானங்களில் வேகமாக செல்லக்கூடாது என்றும், அதற்க்கு மேல் வேகமாக சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சென்னை சாலைகளில் பகலில் 40 கி.மீ, இரவில் 50 கி.மீ என நிர்ணயிக்கப்பட்ட வாகன ஓட்டிகளின் வேக கட்டுப்பாட்டு அளவை, வாகனங்கள் செல்லும் சராசரி வேகத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சாலைகளில் உள்ள கருவி மூலம் ஒரு வாரத்திற்கு வாகனங்களின் வேகம் கணக்கிடப்பட்டு, சராசரி வேகம் நிர்ணயிக்கப்பட உள்ளது; அதன் பிறகே, அபராதம் விதிக்கும் செயல்பாடு தொடங்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.