செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள பரனூர் சுங்கச்சாவடியில் வழக்கத்துக்கு மாறாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களில் செல்பவர்களாக இருந்தாலும், வருபவர்களாக இருந்தாலும் சரி செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள பரனூர் டோல்கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். அந்த வகையில் இந்த சுங்கச்சாவடியில் வழக்கமாக திங்கள்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் அரசு விடுமுறைக்கு பின் வரும் நாட்களில் மட்டுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாகி டோல்கேட்டை கடக்க பல நேரங்கள் எடுக்கும் .
கடைசியாக கொரோனா தொற்று காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்க பல சென்னைவாசிகள் தங்களது சொந்த ஊருக்கு செல்லும் போது தான் இந்த சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது சென்னையில் இபாஸ் முறை எளிதாக்கப்பட்டதால் சென்னைக்கு வரும் வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அது மட்டுமின்றி மக்கள் விநாயகர் சதுர்த்தி, ஞாயிறு விடுமுறை என சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வந்ததால் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுபோன்று போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நேரத்தில் கூடுதல் கவுண்டர்களை திறந்து வாகனங்களை விரைவாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…