மழை காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம்…!
சென்னையில் மலை காரணமாக போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்காளாகி உள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் மலை காரணமாக போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேனை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘வடக்கிழக்கு பருவமழையை முன்னிட்டு போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்,
மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்க பாதைகள்:
- ஈ.வெ.ரா சாலை கங்குரெட்டி சுரங்கபாதை
- வியாசர்பாடி சுரங்க பாதை
- கனேஷபுரம் சுரங்க பாதை
மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்:
- ஈ.வெ.ரா சாலையில் சென்ட்ரல் ரயில்வே சந்திப்பிலிருந்து நாயர் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஈ.வெ.ரா சாலை. காந்தி இர்வீன் சந்திப்பு (சி.எம்.டி.ஏ) வழியாக எழும்பூர் நோக்கி திருப்பி விடப்படும்.
- பேந்தியன் ரவுண்டானாவில் இருந்து ராஜரத்தினம் மைதானம் (மார்ஷ்சல் ரோடு) நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அவ்வாகனங்கள் பேந்தியன் சாலை வழியாக செல்ல்லாம். மார்ஷல் ரோடிலிருந்து பேந்தியன் ரவுண்டானாவை நோக்கி வாகனங்கள் வர அனுமதி உண்டு.