சபரிமலை விவகாரத்தில் பாரம்பரியம், பண்பாடு, மரபை கடைபிடிக்க வேண்டும் …! வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
சபரிமலை விவகாரத்தில் பாரம்பரியம், பண்பாடு, மரபை கடைபிடிக்க வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் ,சபரிமலை விவகாரத்தில் பாரம்பரியம், பண்பாடு, மரபை கடைபிடிக்க வேண்டும் .பெண்களுக்கு சம உரிமை உண்டு, ஆனால் இந்த விவகாரத்தில் சம உரிமை அளிப்பது மரபுகளை மீறுவதாகும்.மேலும் டிடிவி தினகரன் காட்டும் வித்தைகள் மக்கள் மத்தியில் எடுபடாது.அதிமுக மூலம் டிடிவி தினகரன் தன்னை அடையாளப்படுத்த நினைத்தார். எங்களைப் பற்றியே டிடிவி தினகரன் பேசினார் என்றால் அவர்கள் இயக்கம் போனியாகவில்லை என்றுதான் அர்த்தம்.அதிமுகவையும், அமமுகவையும் இணைக்க வேண்டும் என ஒரு தொண்டர் கூட நினைக்கவில்லை என்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.