10 நாட்களில் வியாபாரிகள் தடுப்பூசி போடவும் -ககன்தீப் சிங் பேட்டி..!
- அடுத்த பத்து நாள்களுக்குள் கோயம்பேடு வியாபாரிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போடவேண்டும்.
- கொரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சென்னை கோயம்பேட்டில் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியை ஆய்வு செய்தபின் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மே மாதத்தில் 9003 பேருக்கு கோரண பரிசோதனை செய்யப்பட்டதில் 16 பேருக்கு தொட்டு உறுதியானது. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விற்பனைக்குப் பின் தீவிர தூய்மை பணி நடைபெறும்.
அடுத்த பத்து நாள்களுக்குள் கோயம்பேடு வியாபாரிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போடவேண்டும். ஞாயிறுதோறும் பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை குப்பைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெறும். இதுவரை 6,340 வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைத்து வியாபாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கப்படும்.
கொரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மக்கள் தேவை என்று வீடுகளை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர் என தெரிவித்தார்.