TRajender in Tuticorin [File Image]
தென்மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. குறிப்பாக தாமிரபரணி ஆறு நிரம்பியதால் நீர்நிலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கானது ஊருக்குள் புகுந்தது. இந்த வெள்ள பாதிப்புகளில் இருந்து இன்னும் இருமாவட்ட மக்கள் முழுதாக மீளவில்லை என்றே கூற வேண்டும்.
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கி வரும் வேளையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வளர்களும் தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து வருகின்றனர். இன்று நடிகரும் , இயக்குனருமான டி.ராஜேந்திரர் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்.
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதி மக்களுக்கு அரிசி, பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி கொண்டிருக்கும் போது திடீரென உடல் சோர்வு ஏற்பட்டு அப்படியே மயங்கினார். இதனால் அந்த இடத்தில சற்று பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் அருகில் இருந்தவர்கள் டி.ஆர் முகத்தில் தண்ணீர் தெளித்து சற்று ஆசுவாசப்படுத்தினர்.
அதன் பிறகு கண்விழித்த டி.ஆர் , அங்கிருந்து காரின் மூலம் திரும்பி சென்றார். பின்னர் நிவாரண பொருட்களை அங்கிருத்தவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்து வழங்கினர். நேற்று மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு சென்னை தீவுத்திடலில் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு, இன்று டி.ராஜேந்திரர் தூத்துக்குடிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…