தூத்துகுடியில் நிவாரண பொருட்கள் வழங்கிய டி.ஆர்.! மயங்கி விழுந்ததால் பரபரப்பு.!
தென்மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. குறிப்பாக தாமிரபரணி ஆறு நிரம்பியதால் நீர்நிலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கானது ஊருக்குள் புகுந்தது. இந்த வெள்ள பாதிப்புகளில் இருந்து இன்னும் இருமாவட்ட மக்கள் முழுதாக மீளவில்லை என்றே கூற வேண்டும்.
தடுக்கி விழுந்த நடிகர் விஜய்! கடுப்பாகி நிர்வாகியை தாக்கிய புஸ்ஸி ஆனந்த்!
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கி வரும் வேளையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வளர்களும் தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து வருகின்றனர். இன்று நடிகரும் , இயக்குனருமான டி.ராஜேந்திரர் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்.
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதி மக்களுக்கு அரிசி, பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி கொண்டிருக்கும் போது திடீரென உடல் சோர்வு ஏற்பட்டு அப்படியே மயங்கினார். இதனால் அந்த இடத்தில சற்று பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் அருகில் இருந்தவர்கள் டி.ஆர் முகத்தில் தண்ணீர் தெளித்து சற்று ஆசுவாசப்படுத்தினர்.
அதன் பிறகு கண்விழித்த டி.ஆர் , அங்கிருந்து காரின் மூலம் திரும்பி சென்றார். பின்னர் நிவாரண பொருட்களை அங்கிருத்தவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்து வழங்கினர். நேற்று மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு சென்னை தீவுத்திடலில் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு, இன்று டி.ராஜேந்திரர் தூத்துக்குடிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.