திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு ! கொறடாவாக ஆ.ராசா தேர்வு

Default Image

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றது.

இதனால் இன்று சென்னையில் திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்நடைபெற்றது.இதில் , திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும் மக்களவை கொறடாவாக ஆ.ராசா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மாநிலங்களவை குழு திமுக தலைவராக திருச்சி சிவாவும் , மாநிலங்களவை திமுக குழு கொறடாவாக டிகேஎஸ் இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்