பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து -மு.க.ஸ்டாலின்
பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே கூறுகையில்,தமிழகம், கேரளா, டெல்லி என மூன்று மாநில பால்களில் தான் நச்சுத்தன்மை அதிகம் எனவும், அதில் தமிழகமே பால் நச்சுத்தன்மையில் முதலிடத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார்.இவர் இவ்வாறு கூறியது தமிழக மக்ககளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாகவும், விவசாயிகள் முதல் வணிகர்கள் வரை பலருக்கும் அடிப்படைப் பொருளாதார பலமாகவும் உள்ள பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து. இதன் உண்மைத் தன்மையை உணர்ந்து முதல்வர் தீவிர கவனம் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.