திமுக ஆட்சி அமைந்த பிறகும் எந்தச் சூழலிலும் நச்சு ஆலை ஸ்டெர்லைட் திறக்கப்படாது – முக ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கலாம் என்ற முடிவு தற்காலிகமானதுதான் என்று முக ஸ்டாலின் நிலைப்பாடு.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தற்காலிகமாக 4 மாதங்களுக்கு ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அனுமதி வழங்கி, முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து, முக ஸ்டாலின் திமுகவின் நிலைப்பாட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம், அதற்கான மின்சாரத்தை வழங்கலாம் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என்றும் இந்த முடிவு தற்காலிகமானதுதான் எனவும்  கூறியுள்ளார்.

அதுவும் ஆக்சிஜன் தயாரிக்க மட்டுமே இந்த அனுமதி, வேறு எந்த நிலையிலும் ஆலையை இயக்கக்கூடாது. இதனை கண்காணித்திட மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மக்கள் நலவாழ்வு துறை அதிகாரி ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைத்திட வேண்டும்.

மேலும் இந்த குழுவில் தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஸ்டெர்லைட் போராட்ட குழு மற்றும் சுற்றுசூழல் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அனுமதியை வைத்து ஆலையை நிரந்தமாக திறக்க அனுமதி கூறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தயாரிக்கப்படும் ஆக்சிஜன் தமிழ் மக்களுக்கு தேவைப்படும் அளவிற்கு இலவசமாக வழங்கவேண்டும். அதுபோன்று, ஸ்டெர்லைட் ஆலை சொந்த மின்சாரத்தை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும் தமிழக அரசு தான் மின்சாரம் வழங்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்..! மொறு மொறு கல்கல் செய்வது எப்படி?. வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்..! மொறு மொறு கல்கல் செய்வது எப்படி?. வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50…

29 minutes ago

பிரேசில் நகரில் விழுந்து நொறுங்கிய விமானம்: 10 பேர் உயிரிழப்பு!

பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில்,…

30 minutes ago

2026 தேர்தலில் திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்க திட்டமா? திருமாவளவன் பதில்

கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற…

49 minutes ago

தேர்தல் விதிகள் திருத்தம் : பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் எதிர்க்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சென்னை : தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி, தேர்தல் விதிகளை…

1 hour ago

அல்லு அர்ஜுன் வீடு தாக்கப்பட்ட விவகாரம்: 6 பேருக்கு ஜாமீன்.. பின்னணியில் ரேவந்த் ரெட்டி?

தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன்…

2 hours ago

சிறப்பு நீட் கலந்தாய்வு., ‘கெடு’ விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி : நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நீட் (NEET) எனும் பொது நுழைவு தேர்வு…

3 hours ago