20,49,000 சுற்றுலா பயணிகள் வருகை….2018-ஆம் ஆண்டில் கன்னியாகுமரி சாதனை…!!

Default Image

கடந்த ஆண்டில் கன்னியாகுமரிக்கு 20 லட்சத்து 49 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி உலக அளவில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இங்கு சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் இரண்டும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவையும் பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளன.

சுற்றுலா பணிகள் எணிக்கை :

இவற்றை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் படகு சவாரிகளும் இயக்கப்படுகின்றன. இதனிடையே கடந்த ஆண்டில் 20 லட்சத்து 49 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

ஆயினும் கடந்த 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் 82 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குறைவாக வந்துள்ளனர். கடந்த 2017ல் 21 புள்ளி 31 லட்சம் பேர் இங்கு வருகை புரிந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்