நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 4 ஆம் கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கில், தமிழக அரசு மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்துள்ளது.
மேலும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசல் சுற்றுலா தளங்களுக்கு வெளியூர் பயணிகள், இ-பாஸ் பெற்று செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மக்கள், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையை காண்பித்து சுற்றுலா செல்லலாம் எனவும், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் இ-பாஸ் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
முதல்கட்டமாக தாராவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, ரோஸ் பூங்கா இறக்கப்படும் எனவும், அரசின் அறிவிப்பிகளை தொடர்ந்து மற்ற சுற்றுலா தலங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.