இங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – மாவட்டம் நிர்வாகம் அறிவிப்பு
ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க, பரிசல் இயக்க மீண்டும் அனுமதி.
தருமபுரி: ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க, பரிசல் இயக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அனுமதில் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஒகேனக்கல் மெயினருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தடை விதித்திருந்தார். இதனால், மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை நுழைவு வாயிலை பூட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நீரவரது குறைந்துள்ளதால் மீண்டும் சுற்றுலா பயணிகளை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 9000 கனஅடியாக உள்ளது.