சுற்றுலாத்தலங்கள் வார இறுதியில் மட்டும் களை காட்டுகிறது, மற்ற நாட்களில் வெறிச்சோடி உள்ளது!
சுற்றுலாத்தலங்கள் வார இறுதியில் மட்டும் களை காட்டுகிறது, மற்ற நாட்களில் வெறிச்சோடி உள்ளது என நீலகிரி சுற்றுலா சார்பில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் மக்களுக்காக அரசு சில தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், சிறு குறு வியாபாரிகள் சுற்றுலாத் தலங்களை நம்பி இருக்கக்கூடிய வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தளங்களை திறக்க உத்தரவு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து கூறக்கூடிய சுற்றுலாத்தள அமைச்சகம் குறைந்த அளவிலான இ பாஸ் வழங்கப்பட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
மேலும் நீலகிரியில் தொட்டபெட்டா முதுமலை ஆகிய சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படாததால் பயணிகளின் வருகை குறைவாக உள்ளதாகவும், வார இறுதி நாட்களான சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகவும் மற்ற நாட்களெல்லாம் பயணிகள் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் வார இறுதி நாட்களில் தான் தாவரவியல் பூங்கா ரோஜா பூங்கா உள்ளிட்ட 6 பூங்காக்களையும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசிப்பதாகவும், மற்ற நாட்களில் 150 பேர் கூட நாளொன்றுக்கு வருவதில்லை எனவும் கூறியுள்ளனர்.