சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத்திற்கு சுற்றுலா நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்தில் சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
8 மாவட்டங்களில் N.I.A அதிகாரிகள் சோதனை..!
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் ஹைதராபாத் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் ஒரு லாரி மற்றொரு லாரி மீது மோதி விபத்தில் சிக்கி உள்ளது. அந்த சமயம் அந்த பகுதியில் வந்த லாரி இந்த லாரி மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் லாரியை வேறு பக்கம் திருப்பி உள்ளார்.
அப்போது, எதிரே சென்னையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டு இருந்த சுற்றுலா பேருந்தின் மீது லாரி வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 15 பேரையும் உடனடியாக மீட்டு நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
உயிரிழந்த எட்டு பேரின் உடல்களும் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டு தற்போது நெல்லூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்து குறித்து சென்னையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் நேரில் வந்து அடையாளம் காட்டிய பின்னர் தான் உயிரிழந்தவர்களின் விவரம் பற்றி முழு விவரம் தெரியவரும் எனககூறப்படுகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…