இன்று முதல் குமரியிலுள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த 7ஆம் தேதி முதல் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கான சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இதனால் கன்னியாகுமரிக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு அருகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வரும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று முதல் கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வசதியாக கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் படகு போக்குவரத்து தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 12 நாட்களுக்கு பின் இன்று முதல் சுற்றுலா பயணிகள் படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…