குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!
தென்காசி மாவட்டம் குற்றாலம் ,செங்கோட்டை ,தென்காசி சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை நான்கு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது .ஏற்கனவே கருப்பானதி , அடவி நயினார் கோவில் அணை மற்றும் குண்டாறு அணை ஆகியவை நிரம்பி அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தற்போது குற்றாலத்தில் உள்ள அருவிகள் அனைத்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகமான தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.இதனால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.