புலியைத் தொட்டாலும் தொடுக மொழியைத் தொடாது விடுக – கவிஞர் வைரமுத்து
தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? என வைரமுத்து ட்வீட்.
இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்க்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எங்களை ஆண்ட இஸ்லாமியரோ தெலுங்கரோ மராட்டியரோ வெள்ளையரோ தங்கள் தாய் மொழியை எங்கள் தலையில் திணித்ததில்லை. தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? அதிகாரமிக்கவர்களே அன்போடு சொல்கிறேன் புலியைத் தொட்டாலும் தொடுக மொழியைத் தொடாது விடுக’ என பதிவிட்டுள்ளார்.
எங்களை ஆண்ட
இஸ்லாமியரோ தெலுங்கரோ மராட்டியரோ வெள்ளையரோ
தங்கள் தாய் மொழியை
எங்கள் தலையில் திணித்ததில்லைதமிழ்நாட்டைத்
தமிழர்கள் ஆளும்பொழுதே
இந்தியைத் திணிப்பது
என்ன நியாயம்?அதிகாரமிக்கவர்களே
அன்போடு சொல்கிறேன்புலியைத்
தொட்டாலும் தொடுக
மொழியைத்
தொடாது விடுக#HindiImposition— வைரமுத்து (@Vairamuthu) October 12, 2022