தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம். அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் இன்று 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,959 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதித்துள்ள முதல் 6 மாவட்டங்களில், சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. கடலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் எண்ணிக்கை 395 ஆக உள்ளது. திருவள்ளூரில் இன்று 47 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை அங்கு 337 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து விழுப்புரம் 299, அரியலூர் 275, செங்கல்பட்டு 267 போன்ற மாவட்டங்களில் அதிகமாக கொரோனா பரவியுள்ளது.
சென்னை: கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரமும் உள்ளது என்று சென்னை ஐஐடி…
சென்னை: இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை'…
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…
சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…