அதிகம் செல்போன் பயன்படுத்ததே என தாய் திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்போதைய நவீன காலகட்டத்தில் பிறந்து 5 மாதங்கள் கூட ஆகாத பச்சிளங்குழந்தையும் போன் இருந்தால் தான் சாப்பிடுகிறது. அதுவும் சாதாரணமாக அல்ல ஆண்ட்ராய்டு போன் கேட்டு அடம் பிடிக்கிறார்கள். சிறு வயதிலேயே மாணவர்கள் படிப்பில் செலுத்தக்கூடிய கவனம் முழுவதையும் போனில் தான் செலுத்துகிறார்கள். இதனால் பல விளைவுகளையும் சந்திக்க நேரிடுகிறது.
கடலூரில் உள்ள புருஷோத்தமன் எனும் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது மனைவி லட்சுமி மற்றும் மகள் செந்தமிழுடன் ஆடு மேய்க்கும் தொழில் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். 12 ஆம் வகுப்பு படிக்க கூடிய இவரது மகள் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அதிகமாக போனை பயன்படுத்தியுள்ளார். அடிக்கடி அதனுடனே நேரத்தை அதிகம் செலவிடுவதால் செந்தமிழின் தாய் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த செந்தமிழ் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆடு மேய்க்க வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய லட்சுமி நுரை தள்ளிய நிலையில் மகள் கிடப்பதை கண்டு அலறியுள்ளார்.
எனவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.தீவிரமாக இவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டாலும், மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். போன் அதிகம் உபயோகிக்க கூடாது என்பதை பெற்றோர்கள் தான் கண்டிக்க வேண்டும், அவ்வாறு கண்டித்ததற்காக பள்ளி மாணவி உயிரை மாய்துகொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…