தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி முதற்கட்ட தேர்தல் தேர்தல் 27 ஆம் தேதியும் ,2-ஆம் கட்ட தேர்தல் 30 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் அனைத்தும் நடைபெற்று முடிந்தது.இதனை தொடர்ந்து முதற்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.
வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.இந்த முதற் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 76.19 % வாக்குகள் பதிவாகி உள்ளது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது
2-ஆம் கட்ட தேர்தல் 30 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் ( 28 ஆம் தேதி) பரப்புரை ஓய்ந்தது.இதனையடுத்து வருகின்ற 30-ஆம் தேதி 2-ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.தேர்தல் பரப்புரை முடிவுக்கு வந்தபின் உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத நபர்கள் வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. விதியைமீறி வெளியேறாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…