#BREAKING : நாளை உருவாகிறது ‘ஆம்பன்’ புயல் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்க கடலில் நாளை உருவாகிறது “ஆம்பன்’ புயல் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது .காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற வாய்ப்பு உள்ளது .ஆம்பன் புயலால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.17-ஆம் தேதி வரை வடமேற்கு திசையிலும் , அதன் பிறகு வடகிழக்கு திசையிலும் ஆம்பன் புயல் நகர வாய்ப்பு உள்ளது.18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மணிக்கு 75-85 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
ஆம்பன் புயலால் கேரளா , கர்நாடகா மாநிலங்களில் காற்றின் ஈர்ப்பு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இந்த சமயத்தில் தெற்கு வங்க கடல் மற்றும் வடக்கு வங்கக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.