தாமிரபரணியில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு.! ஆற்றங்கரைக்கு செல்ல ஆட்சியர் தடை.!

Default Image

நாளை தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் தூத்துக்குடி மக்கள் யாரும் செல்லக்கூடாது என தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் / கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளனர்.

தாமிரபரணி ஆற்று பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து சேர்வலாறு – பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் நீர்ப்பெருக்கு அதிகமாகி உள்ளது. ஆதலால் சேர்வலாறு – பாபநாசம் பகுதியில் நீர் திறப்பது 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தற்போது வரும் 2500 கனஅடி நீரானது நாளை 15 ஆயிரம் கனஅடி நீராக அதிகரிக்கப்பட உள்ளது.

நாளை காலை தூத்துக்குடி மாவட்டம் மருதூரில் இந்த 15 ஆயிரம் கனஅடி நீர் தூத்துக்குடி மாவட்டம் மருதூரில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியான மருதூர், அகரம், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், முக்காணி ஆகிய பகுதிகளில் ஆற்றங்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீந்துவதற்கோ, மீன் பிடிப்பதற்கோ அல்லது வேறு எந்த வேலை செய்யவோ நாளை தாமிரபரணி ஆற்றங்கரை பக்கம் யாரும் செல்லக்கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் / காவல் கண்காணிப்பாளர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்