நாளை கார்த்திகை தீபம்: தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.!
திருவண்ணாமலை கோயிலில் தீபாராதனை செய்யப்பட்டு மகாதீப கொப்பரை மலை மீது எடுத்துச் செல்லப்பட்டது.
திருவண்ணாமலையின் அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலையில் வரும் 29 ஆம் தேதி அதாவது நாளை தீப திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் மற்றும் வெளியூர் வாகனங்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு மாவட்டம் நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது, நாளை கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு திருவண்ணாமலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருவண்ணாமலை கோயிலில் தீபாராதனை செய்யப்பட்டு மகாதீப கொப்பரை இன்று மலை மீது எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலின் 2,668 அடி உயர மலை மீது நாளை மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது.