அதிகனமழை எச்சரிக்கை.! காஞ்சிபுரம் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.!
நாளை அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை , திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எனப்படும் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நாளை திருவள்ளூர் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரி விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதே போல தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.