தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பால் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நாளை முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. திங்கள்கிழமையுடன் அரையாண்டுத் தேர்வு விடுமுறை நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை (ஜன.2) இன்று திறக்கப்பட்டது.
அரையாண்டு மற்றும் 2-ஆம் பருவத் தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வுகள் ஒரே வினாத்தாள் முறையில் நடத்தி முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அரையாண்டு விடுமுறை கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கி, திங்கள்கிழமை( ஜனவரி 1) வழங்கப்பட்டது.
2024-ல் மிகப்பெரிய மகிழ்ச்சியை அதிமுகவிற்கு மக்கள் கொடுக்கவுள்ளனர்- செல்லூர் ராஜூ
ஆனால், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ததால் இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. தள்ளி வைக்கப்பட்ட அந்த அரையாண்டு தேர்வுகள் விடுமுறைக்கு பின் நடத்தப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தும் இருந்தது.
இதனையடுத்து, அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திளும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை (ஜன.3ம் தேதி) முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…