தமிழகத்தில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை!!
தமிழகத்தில் செய்முறை தேர்வு நிறைவு பெற்றதால் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை என தகவல்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஜனவரியில் திறக்கப்பட பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டது. இதையடுத்து ஆன்லைனில் மட்டும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் 12ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்களுக்கு செய்முறை தேர்வு மட்டும் நடைபெற்ற வந்த நிலையில், அவர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் செய்முறை தேர்வு நிறைவு பெற்றதால் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை என தகவல் வெளியாகியுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும்போது, 15 நாட்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்படுறது.