நாளை திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம்
நாளை (அக்டோபர் 14-ஆம் தேதி )திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே பரபரப்பாகியுள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.
இதனிடையே 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க, குழு அமைத்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கை குழுவில் இடம்பெற்றனர்.
இதன் பின் திமுக தேர்தல் அறிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டார்.அவரது அறிக்கையில், நாளை (அக்டோபர் 14-ஆம் தேதி) திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.