செங்கல்பட்டு : பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை.!

தொடர் மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறுமாவட்டடங்களில் தொடர் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பலர் தங்களது அன்றாட வாழ்வில் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்/
தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், அங்கு நாளை, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.