#BREAKING : தொடர் கனமழை எதிரொலி -நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை , காஞ்சிபுரம் ,விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது .மேலும் தூத்துக்குடி , நெல்லை, வேலூர் ,திருவண்ணாமலை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று தெரிவித்தது வானிலை ஆய்வு மையம்.
ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முதலே தொடர்ந்து மழை பெய்தது.இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி மக்கள் அவதியுற்று வருகின்றனர்.இந்தநிலையில் தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.