தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை.
இதுகுறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்கறிகள் குறிப்பாக தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்தி மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் மற்றும் தக்காளி கிடைக்க தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.85/- ரூ.100/ வரை குறைவான விலையில் தரமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 MT தக்காளி மற்றும் இதர காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று மதியம் வரை தோராயமாக 8 MT தக்காளி மற்றும் இதர காய்கறிகள் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வெளிச்சந்தை விலையை விட குறைந்த விலையில் பின்வரும் விவரப்படி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, தக்காளி கிலோ 79 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 70 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 38 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 65 ரூபாய்க்கும் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள நகர்ப்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள குறிபிட்ட நியாயவிலைக்கடைகளிலும் காய்கறி மற்றும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் நகரும் மண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அரசின் இந்நடவடிக்கையால் நேற்று வரை வெளிச்சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.150/- என்று விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.90-100 வரை எனவும் மேலும் இதர காய்கறிகள் விலையும் வெளிச்சந்தையில் கணிசமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…