#BREAKING : வாகனத்தில் தக்காளி விற்க அனுமதிக்கலாம் – நீதிபதி கருத்து..!

Default Image

தக்காளி விலை உயர்வை கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா..? நீதிமன்றம் கேள்வி.

கொரோனா கட்டுப்பட்டால் மூடப்பட்டுள்ள தக்காளி விற்பனை மைதானத்தை திறக்கக்கோரி பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. எங்கள்  சங்கத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் 150, 300, 600 சதுர அடி கொண்ட கடையை வைத்துள்ளவர்கள் தான் உள்ளனர்.

1200 முதல் 2400 பரப்பளவு சதுர அடி கொண்ட கடைகளுக்கு  வாகனங்கள் நிறுத்த அனுமதி வழங்கப்படுவதாகவும் தங்களை போன்ற சிறிய கடைகளை கொண்டவர்களுக்கு வாகனங்கள் நிறுத்த அனுமதி வழங்கப்படாததால் மைதானத்தை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. சிஎம்டிஏ தரப்பில் பொருட்களை இடமாற்றம் செய்ய தான் மைதானம் மைக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு அல்ல எனவேதான் அந்த மைதானத்தை முடியதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது, தக்காளி தட்டுப்பாடு, விலை உயர்வை கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தையில் சிறு வியாபாரிகள் இணைந்து மைதானத்தில் தற்காலிகமாக தக்காளி விற்க அனுமதிக்கலாம் என கருத்து தெரிவித்து கோயம்பேடு சந்தையில் உள்ள மைதானத்தில் தக்காளி லாரிகளை அனுமதிக்க முடியுமா..? என சிஎம்டிஏ, மார்கெட் கமிட்டி ஆகியவை வரும் திங்கட்கிழமை விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்