தக்காளி விலை மேலும் உயர்வு! இன்றைய நிலவரம் இதோ.!

Tomato prices

நாள்தோறும் தக்காளி விலை உயர்ந்து கொண்டே செல்வதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது, மொஹரம் பண்டிகையையொட்டி அதன் தேவை மேலும் அதிகரித்துள்ளதால், தக்காளி விலை கிலோவிற்கு ரூ.10 உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ தக்காளி முதல் ரகம் ரூ.150க்கும், இரண்டாம் ரகம் ரூ.140க்கும். மூன்றாவது ரகம் ரூ.130க்கும், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.170 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.160 வரை விற்கப்படுகிறது. மேலும், சின்ன வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.30 குறைந்து ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி, மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி முதல் ரகம் ரூ.140க்கும், இரண்டாம் ரகம் ரூ.130க்கும், மூன்றாவது ரகம் ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால், ரேஷன் கடைகளில் அதிகளவில் தாக்காளியை விற்பனை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்